கருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு கருங்காலி மரத்தின் நடுப்பகுதியானது மிகவும் கடினமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இதன் தண்டுப் பகுதியை வெட்டி சுவாமி சிலைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் என செய்யப்படுகிறது.
பழங்காலத்தில் இந்த மரத்தினால் செய்யப்பட்ட உலக்கை மிகவும் உறுதியானது என்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கருங்காலி மாலை தெய்வீக குணம் கொண்டது. 108 மணிகள் கொண்ட இந்த மாலை அணிவதும், ஜெபம் செய்யவும் பயன்படுத்துவது நல்லது.
கருங்காலி கட்டை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் உடல் சோர்வு, வலி குறையும்.
கருங்காலி கட்டையை ஊறவைத்து அந்த நீரை கஷாயமாக கொதிக்க வைத்து குடிக்க குடல் சுத்தம் உண்டாகும்.
உடல் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்க பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது
இது முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் நற்குணங்கள், ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த கருங்காலி மர கட்டையால் செய்யப்பட்ட மாலை மேஷம், விருச்சிகம், மிதுன ராசியினரும். சில நட்சத்திரங்களை சேர்ந்தவர்களுக்கும் மிகவும் உகந்ததாகும்.
மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை , திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது.
ஜாதகத்தில் செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு ஏற்படும் நோய், விபத்து, கடன், சொத்து பிரச்சினை, திருமணத் தடை மண வாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசவுகரியங்களை கருங்காலி மாலை குறைக்கிறது. கருங்காலியில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக் கூடிய அனைத்து துன்பங்களும் நீங்கும்.
கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது
There are no reviews yet.